Thursday, February 28, 2013

மத்திய பட்ஜெட் 2013-14: ஏற்றமா? ஏமாற்றமா? சென்னையில் ஓர் அலசல்...!


மத்திய பட்ஜெட் 2013-14,  ஏற்றமா? ஏமாற்றமா? என்கிற தலைப்பில் சென்னையில் ஓர் அலசல் கருத்தரங்கம் நடக்கிறது.
இந்தக் கூட்டம் மார்ச் 5, 2013 செவ்வாய் கிழமை மாலையில் நடக்கிறது.


வழங்குபவர்கள் :

 எஸ்.பி.. லைஃப் இன்ஷூரன்ஸ்
நாணயம் விகடன்
குட்வில் கமாடிடீஸ்

சிறப்புரை:

திரு. வி.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்
வி.நாகப்பன்

திரு. எம்.ஆர்.வெங்கடேஷ், பொருளாதார சிந்தனையாளர்
எம்.ஆர்.வெங்கடேஷ்

திரு. ஆர். சீனிவாசன், பொருளாதார நிபுணர்
ஆர்சீனிவாசன்

இடம்: வாணி மஹால், ஜி.என்.செட்டி சாலை, தி.நகர். சென்னை .

நாள்:மார்ச் 5, 2013 செவ்வாய் கிழமை

நேரம்: மாலை 6.15 மணி முதல்


கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இலவசம்ஆனால், பதிவு செய்வது அவசியம்:

NAVBUD (Space) Name (Space)  Age (Space)  City என டைப் செய்து 562636 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி பதிவு செய்துக் கொள்ளவும்.

தொடர்புக்கு...!

எஸ்.பி.. லைஃப் இன்ஷூரன்ஸ்
Mr. E. Thirumudi Pandian
Regional Sales Manager - South 1
Regional office:
SBI Life Insurance co. Ltd,
Third Flooor, State Bank og India Learning Centre Building
20, Pycrofts Garden Road, Numgambakkam, Chennai - 600 006
Ph: 044 - 4308 4390, 044- 4214 2961
Email: e.pandian@sbi-life.com

Mr. N. Srinivasan,
Senior Area Manager
Regional office:
SBI Life Insurance co. Ltd,
3r Flooor, State Bank og India Learning Centre Building
Ne. 20, Pycrofts Garden Road, Numgambakkam, Chennai - 600 006
Ph: 044 -6515 4134, 044 - 4300 0539 Email:srinivasan.n@sbi-life.com

நாணயம் விகடன்
Naanayam Vikatan - Personal Finance Weekly Magazine 
757, Anna Salai, Chennai - 600 002 
Ph: 044 - 2854 5500, 044 - 5588 3300 
Direct Phone: 044-2851 1616 Email: nav@vikatan.com
Web Site: www.vikatan.com. www.nanayam.vikatan.com 

குட்வில் கமாடிடீஸ்

Contact Information
Chennai - Head Office
New No  9 (Old No 4 / 1) 1st Floor
Masha Allah Building , Bheema Sena Garden Street
Opp: Royapettah High Road
Mylapore,  Chennai,  Tamil Nadu - 600 004
Ph: +91-  44 - 4356 5050
Fax : +91 -  44 -  4353 6085, E-mail: admin@gwcindia.in

Coimbatore - Branch Office
G-2/D,Manchester Square
Ground Floor,No.12  Opp:Kidney Centre
Puliakulam Road kovai - 641 037. Tamil Nadu
Phone: +91- 44- 4274490
Fax : +91- 44- 4353 6085, E-mail: kovai@gwcindia.in

Trichy - Branch Office
B-22, 1ST Floor, Ramalinga Nagar
First Main Road, Woraiyur, Trichy
Tamil Nadu - 620 003.
Phone: 0431- 4000 857, E-mail: trichy@gwcindia.in

Share:

உலக பாரம்பரிய தினம் - ஏப்ரல் 18

உலக பாரம்பரிய தினம்
World Heritage Day, April 18

நினைவு சின்னங்களுக்கும், புராதன இடங்களுக்கான உலக பாரம்பரிய தினம் (World Heritage Day, April 18ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கி வைக்கப்பட்டது.

1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18 ஆம் தேதியை சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites )கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.

இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு பரிந்துரைத்தது.

அதன் விவரம்:
   
* பழங்கால கட்டட பெருமைகளை கண்காட்சிகளாக அமைத்து விவரிப்பது

* கட்டணம் ஏதுமில்லாமல் இந்தத் தினத்தில் நினைவிடம், மற்றும் அருங்காட்சியங்களில் பொது மக்களை அனுமதிப்பது
   
* இந்தத் தினத்தின் தேவை பற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது

* பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது
   
* பாரம்பரிய பெருமைகளை பறைசாற்ற்றும் புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள் போன்றவற்றை அச்சிடுவது
   
* பாரம்பரியத்தை பேணி பராமரித்து வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது
   
* பள்ளிக்கூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாரம்பரியத்தின் பெருமைகளை எடுத்துச் செல்வது..! நிகழ்ச்சிகள் நடத்துவது

ஒரு நாட்டுக்கு அழகு சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே.

இவை மனித இனத்துக்கே பொதுவான வளங்கள். ஆனால் கவனிப்பாரற்று இந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.

உலகின் மிக முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் உலக ப்ராம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.Share:

மத்திய பட்ஜெட் 2013-14: இன்று வியாழக்கிழமை தாக்கல்..!

வருகிற 2013-14 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் திரு. இன்று  ப.சிதம்பரம் வியாழக் கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பயணிகள் போக்கு  கட்டணத்தில் மாற்றம்  செய்யப்படவில்லை.
முன்பதிவு, தத்கல், சூப்பர் பாஸ்ட் ரயில் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. அதாவது மறைமுகமாக கட்டணம்  உயர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய  நிதியமைச்சர் திரு. ப.சிதம்பரம் தாக்கல் செய்தார்.

இன்று பிப்ரவரி 28 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை ப.சிதம்பரம்  தாக்கல் செய்கிறார். ப.சிதம்பரம் தாக்கல்  செய்யும் 8 ஆவது பட்ஜெட் இது..

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், இந்த முறை ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது, அதாவது தேர்தல் பட்ஜெட் என்பதால் சாதாரண மக்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளுடன் கூடிய கவர்ச்சி அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெறுகிறது.
குறிப்பாக, அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பு இப்போதுள்ள ரூ. 2 லட்சம் என்பது ரூ. 2.3 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  Share:

பொருளாதார ஆய்வு அறிக்கை 2013: முக்கிய அம்சங்கள்..!


* * இந்திய நாட்டை ஆட்டி படைத்துக் கொண்டுக்கும் நிதி பற்றாக்குறையை 5.3 சதவிகிதமாக ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இதை 5.2% ஆக குறைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. .

* * இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம்6.1 முதல் 6.7ஆக இருக்க வாய்ப்பு.

** 2012 - 13 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி) இலக்கு 5 சதவிகிதம்.

**  சர்வதேச நிலவரத்துக்கு இணையாக டீசல் மற்றும் நேச்சுரல் கேஸ் (சமையல் எரிவாயு) விலையை அதிகரிக்கப்பட உள்ளது. .

**  2013 - 14 ஆம் ஆண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 4.8% ஆக குறைக்கப்படும். 

**  2013 - 14 ஆம் ஆண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை (கரன்ட் அக்கவுண்ட் டெபிசிட்) 4.6 சதவிகிதமாக ஆக குறைக்கப்படும்.   
Share:

ரயில்வே பட்ஜெட் 2013 -14: பயணிகள் நலன்கள்..!


** இணையத் தளம் (இன்டர் நெட் - ஆன்லைன்) மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அதிகாலை 12.30 மணியில் இருந்து இரவு 11.30 மணிவரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

** செல்போன் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

* ( நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்டுகள் பதிவு செய்யும் அளவுக்கு இணையத் தள டிக்கெட் சேவை வேகம் மேம்படுத்தப்படும். ஒரே நேரத்தில், 1,20,000 பயன்படுத்தும் அளவுக்கு வேகம் மற்றும் திறன் மேம்படுத்தப்படும்.

** முதல்முறையாக, மும்பை புறநகர் ரயில் சேவையில், ஏ.சி. பெட்டிகள் பொருத்தப்படுகிறது.  மும்பையில், 72 கூடுதல் சேவைகளும், கொல்கத்தாவில் 18 கூடுதல் சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும்.

சென்னை..!

**  சென்னையில், 12 பெட்டிகள் கொண்ட 30 புறநகர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

**  67 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் விடப்படும்.  26 புதிய பயணிகள் ரயில்களும், 13 மின்சார ரயில்களும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

* * 57 ரயில்களின் பயண தூரம் நீட்டிக்கப்படும். 24 ரயில்களின் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* ரயில்களில் உயிரி (பயோ) கழிப்பறை வசதி செய்யப்படும்.

* 1,52,000 பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும். ரயில்வே பாதுகாப்பு படை பணியிடங்களில் 10% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

* பயணிகள் மற்றும் பணியாளர் தொடர்பான பல்வேறு சேவைகளுக்கு ‘ஆதார்‘ அடையாள அட்டை புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்படும்.


**  குறிப்பிட்ட ரயில்களில், ‘வை–பை‘  (wi-Fi கம்பி இல்லா இன்டர் நெட)  வசதி இலவசமாக அளிக்கப்படும்.

** ரயில்களில், மைக் மூலம் அறிவிக்கும் வசதியும், எலெக்ட்ரானிக் தகவல் திரை வசதியும் அறிமுகப்படுத்தப்படும்.

* * ஐந்தாண்டுகளில் 10,797 லெவல் கிராசிங்குகள் நீக்கப்படும்.

** தானியங்கி சிக்னல் அமைப்புகளில் ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை கருவி நிறுவப்படும்.

** தானியங்கி விபத்து நிவாரண ரயில்கள் அறிமுகம். தீ மற்றும் புகை கண்டறியும் கருவிகள் நிறுவப்படும்.


புதிய பாதை..!

** முன்பதிவு நிலவரம் குறித்து பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி அறிமுகம்.

** 500 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். 750 கி.மீ. தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை போடப்படும். 450 கி.மீ. தூர பாதை, அகலப் பாதையாக மாற்றப்படும்.

* * வரும் 2013-14 ஆம் நிதி ஆண்டில், சரக்கு ஏற்றும் இலக்கு 1,047 மெட்ரிக் டன்னாக மதிப்பீடு.

* பயணிகள் கட்டணம் மூலம் ரூ. 1,43,742 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

** ரயில்வே துறையில் மாற்று திறனாளி பெண்களுக்கு வேலை

* புகார்களை தெரிவிக்க 24 மணிநேரமும் செயல்படும் உதவி எண்: 180011132

Share:
Powered by Blogger.

அதிக ஆதரவு - ஒரு வாரம்

Category

Blog Archive

முக நூலில் பின் தொடர

Google+ Followers

இலவச செய்தி மடல்